ADDED : மே 11, 2026 11:40 PM

அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் காற்றுடன் பெய்து வரும் மழையால் நீதிமன்றம் முன்பு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் காலை 11:00 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் முதுகுளத்துார், கமுதி, கடலாடி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தெருக்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். முதுகுளத்துார் மேலச்சாக்குளம் செல்லும் ரோடு நீதிமன்றம் வாசல் முன் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதே போன்று பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுள்ளன.
