/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்தரப்பு லங்காடி போட்டி: இந்திய அணி வெற்றி
/
முத்தரப்பு லங்காடி போட்டி: இந்திய அணி வெற்றி
ADDED : ஜூலை 10, 2025 02:30 AM
முதுகுளத்துார்: நேபாளத்தில் நடைபெற்ற முத்தரப்பு லங்காடி போட்டியில் இந்திய அணி ஆண்கள்,பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
நேபாளத்தில் இந்தியா -நேபாளம் அணிகள் மோதும் முத்தரப்பு லங்காடி போட்டி ஜூலை முதல் வாரத்தில் நடந்தது. போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி ஆண்கள், பெண்கள் பிரிவில் 40 வீரர்கள் சென்றனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட நான்கு பேர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவிலும் நடைபெற்ற போட்டியில் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்தது.
முத்தரப்பு போட்டியில் ஒயிட்வாஸ் செய்து இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வீரர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்திய அணிக்குவிளையாடிய தமிழகத்தை சேர்ந்த தேவசித்தம், சரண், நெல்சன், நந்தினி ஆகியோரை தமிழக லங்காடி விளையாட்டு கழக தலைவர் பாலு, துணைத் தலைவர் நடராஜன், தேர்வு குழு தலைவர் கார்த்திகேயன் உட்பட பொதுமக்கள் பாராட்டினர்.