ADDED : ஏப் 24, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவர் போப் பிரான்சிஸ் இத்தாலியின் வாடிகன் நகரில் ஏப்.,21ல் காலமானார். இதையடுத்து நேற்று ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள ஜெபமாலை அன்னை சர்ச் வளாகத்தில்பாதிரியார் சிங்கராயர் தலைமையில் மறைந்த போப் பிரான்சிஸ் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடந்தது.
போப் பிரான்சிஸ் நல்லடக்கம் முடியும் வரை சர்ச்சில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது. சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

