ADDED : ஏப் 26, 2025 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்   -காங்.,கட்சி சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 26 பேருக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். காருகுடி சேகர், வட்டார தலைவர்கள் சேதுபாண்டி, அன்வர் அலி நாசர், நகர் தலைவர் கோபி, மகளிர் காங்., ராமலட்சுமி, வழக்கறிஞர் அன்புசெழியன், மனித உரிமை குழு அபுதாஹிர், நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் முருகானந்தம் பங்கேற்றனர்.

