/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலம்: ரத்த வங்கியில் ரத்த இருப்பு விபரம் இல்லை
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலம்: ரத்த வங்கியில் ரத்த இருப்பு விபரம் இல்லை
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலம்: ரத்த வங்கியில் ரத்த இருப்பு விபரம் இல்லை
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலம்: ரத்த வங்கியில் ரத்த இருப்பு விபரம் இல்லை
ADDED : ஜூலை 20, 2025 10:55 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்த இருப்பு குறித்த விபர பலகை உள்ளது. ஆனால் அதில் விபரங்கள் தான் இல்லை. எல்லாமே மறைமுக நடவடிக்கையாக உள்ளதால் தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனை விசாரித்து மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்த வங்கி வங்கியில் ரத்ததானம் வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் போது அதற்கு ஈடாக நோயாளிகளின் உறவினர்கள் யாராவது ஈடாக ரத்ததானம் வழங்க வேண்டும். இது போக ரத்த தன்னார்வலர்கள் ரத்த தேவைக்கு ஏற்ப அடிக்கடி ரத்த தானமும் செய்கின்றனர். முகாம்கள் நடத்தப்பட்டு ரத்தம் சேகரித்து ரத்த வங்கியில் வைக்கப்படுகிறது. இங்கிருந்து ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் கட்டணம் செலுத்தி ரத்தம் தானமாக பெற்று வருகின்றனர்.
ஆனால் ரத்த வங்கியில் இன்று வரை ரத்ததானம் வழங்கப்பட்டது எவ்வளவு. ரத்தம் எந்தெந்த வகையில் எவ்வளவு இருப்பு உள்ளது. என்பதற்கான விபர பலகை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதில் எந்த விபரங்களும் குறிக்கப்படுவது இல்லை. எந்த தகவலும் வெளிப்படையாக இல்லை. எல்லாமே மறைமுக நடவடிக்கையாக ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரத்த வங்கியில் தவறுகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் ரத்த வங்கி குறித்து எதுவும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக ரத்த இருப்பு குறித்த விபரங்கள் இது வரை மூடு மந்திரமாகவே உள்ளது. இது குறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---