/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுருக்குமடி வலையால் சிக்கல்: படகுகள் சிறைபிடிப்பு
/
சுருக்குமடி வலையால் சிக்கல்: படகுகள் சிறைபிடிப்பு
ADDED : நவ 25, 2024 05:00 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் அருகே ரோஜ்மாநகர் கடற்கரை வரை உள்ள பகுதியில், துாத்துக்குடி மாவட்டம், வேம்பார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இரு படகுகளில் தடையுள்ள இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தனர்.
இதையறிந்த ரோஜ்மாநகர் மீனவர்கள், இரு படகுகளையும், 23 மீனவர்களையும் சிறைபிடித்து கரைக்கு அழைத்து வந்தனர். தகவலறிந்த மீன் வளத்துறையினர், போலீசார், இரு தரப்பு மீனவர்களிடம் பேச்சு நடத்தினர்.
'தொடர்ந்து இதுபோன்ற தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி துாத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரோஜ்மாநகர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேசி வருகின்றனர்.