/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் டீசல் விற்ற லாரி பறிமுதல்
/
பாம்பனில் டீசல் விற்ற லாரி பறிமுதல்
ADDED : ஏப் 29, 2025 07:01 AM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் விதிமீறி மீனவர்களிடம் நேரடியாக டீசல் விற்ற லாரியை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பாம்பன் தரவைத்தோப்பில் மீனவர்களிடம் நேரடியாக லாரியில் 10 ஆயிரம் லிட்டர் டீசல் விற்கப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பாம்பன் சென்ற போலீசார் லாரி டிரைவர் கமுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி 31, இந்த டீசலை விற்கும் ஏஜன்ட்டும், பாம்பன் தி.மு.க., நிர்வாகியுமான ராகுல் 27, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் விதிகளை மீறி எந்த பாதுகாப்பு உபகரணம் இன்றி எளிதில் தீப்பற்றி எரியும் டீசலை விற்றது தெரிய வந்தது. இந்த டீசலை ஏராளமான கேன்களில் நிரப்பி மீனவர்கள் வீடுகளில் வைத்துள்ளதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த டீசல் கேன்களை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்கின்றனரா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாரியை பறிமுதல் செய்து பாம்பன் போலீசாரிடம் க்யூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இந்த டீசல் போலியானதா, அதன் பயன்பாடு குறித்த சந்தேகம் எழுந்ததால் ராமநாதபுரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரும் பொன்னுச்சாமி, ராகுலிடம் விசாரித்து வருகின்றனர்.

