/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் 15 நாட்களாக சுரங்க பாதை மூடல்: மக்கள் அவதி
/
ராமேஸ்வரத்தில் 15 நாட்களாக சுரங்க பாதை மூடல்: மக்கள் அவதி
ராமேஸ்வரத்தில் 15 நாட்களாக சுரங்க பாதை மூடல்: மக்கள் அவதி
ராமேஸ்வரத்தில் 15 நாட்களாக சுரங்க பாதை மூடல்: மக்கள் அவதி
ADDED : ஜூலை 08, 2025 10:25 PM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தென்குடாவில் ரயில்வே சுரங்க பாதை 15 நாட்களாக மூடி கிடப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தங்கச்சிமடம் ஊராட்சி தென்குடா கிராமத்தில் நுாறுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். மேலும் இங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் 500க்கும் மேலான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தெற்கில் செல்லும் சாலையை தான் பிரதான பாதையாக பயன்படுத்துகின்றனர்.
இந்த தென்கடா சாலை ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதால் விபத்தை தவிர்க்க 5 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் சுரங்க வழிப்பாதை அமைத்தது. ஆனால் மழைக்காலத்தில் இந்த சுரங்க பாதையில் 3 அடி உயரத்தில் மழைநீர் தேங்குவதால் மாணவர்கள், பொதுமக்களும் 2 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் சுரங்க பாதையை மூடி தடுப்பு வேலிகளால் மூடி தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மழைநீரை முழுமையாக அகற்றாததால் தற்போது 1 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் 15 நாட்களாக சுரங்க பாதை மூடி கிடப்பதால் மாணவர்களும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.