தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகம் தயார் நிலை

 ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகம் தயார் நிலை

 ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகம் தயார் நிலை


ADDED : ஜன 07, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் அதிக ஆண்டுகள் வாழக்கூடிய உயிரினமான கடல் ஆமைகள் ஜன., முதல் வாரத்தில் இருந்து முட்டையிடுவதற்காக வரத்துவங்கி உள்ளன.

மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகம் சார்பில் வாலிநோக்கம் பம்பு ஹவுஸ், அடஞ்சேரி, சீலா மீன்பாடு, மேலமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கடற்கரையோரங்களில் பனை மட்டைகளால் வேலி அமைத்து குறிப்பிட்ட இடங்களில் ஆமைகள் வந்து முட்டையிடக்கூடிய இடங்களில் சேகரிக்கப்பட்டு அவற்றை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கின்றனர்.

நேற்று கீழக்கரை வனச்சர அலுவலகம் சார்பில் ரோந்து சென்ற போது ஏர்வாடி அருகே அடஞ்சேரி பகுதியில் மண்ணைத் தோண்டி 126 முட்டைகளை ஒரு ஆமை விட்டு சென்றது. அவற்றை சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் வைத்தனர். 45 முதல் 50 நாட்களுக்குப் பிறகு குஞ்சு வெளியில் வந்தவுடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர்.

குஞ்சு சிறியதாக இருக்கும் போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து பெண் ஆமை தேர்வு செய்யப்பட்ட இடத்தில் முட்டையிட்டு செல்வது அதன் அறிவை காட்டுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் பிரபு, சோமு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமை முட்டைகளை சேகரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us