ADDED : செப் 20, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
தொண்டி:
தொண்டி அருகே காரங்காடு கடற்கரையில் 20 கிலோ எடையுள்ள கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
அப்பகுதி மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் வனத்துறையினர் சென்று ஆமையை பரிசோதித்து புதைத்தனர். உடல் நலக்குறைவு அல்லது படகில் மோதி ஆமை இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறினர்.
