ADDED : நவ 15, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் மீனவர்கள் வலையில் சிக்கிய ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
மன்னார் வளைகுடா கடலில் ஏராளமான அரிய வகை ஆமைகள் வசிக்கின்றன.
இந்த ஆமைகளை பிடிக்கவோ, உணவாக உட்கொள்ளவோ வனத்துறை தடை விதித்து, மீனவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிந்து சிறையில் அடைகின்றனர்.
நேற்று தனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடலில் மீனவர்கள் கரை வலையில் மீன் பிடித்தனர்.
இந்த வலையை மீனவர்கள் கடற்கரையில் இழுத்து பார்த்த போது 3 அடி நீளத்தில் ஆமை சிக்கியது.
உடனே ஆமையை வலையில் இருந்து மீனவர்கள் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
மீனவர்களின் நற்செயலை வனத்துறையினர் பாராட்டினர்.

