நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை,: திருவாடானையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இளைஞர்கள் இணையும் கூட்டம் நடந்தது. மாநில இளைஞர் அணி செயலாளர் புலேந்திரன் முருகானந்தம் தலைமை வகித்தார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் பாஸ்கர், ஜான்ரெத்தினம், திருவாடானை ஒன்றிய செயலாளர் உதய நாராயணகுமார், இளைஞர் அணி செயலாளர் அருள் டேவிட் மற்றும் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் அக்கட்சியில் இணைந்தனர்.

