ADDED : நவ 25, 2026 08:08 PM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேட்டில் உள்ள த.வெ.க., மேற்கு மாவட்ட பொருளாளர் கிஷோர்குமாரை 6 பேர் உருட்டு கட்டையால் தாக்கி கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கிஷோர்குமார் 28. இவர் இன்று (நவ.,25) மாலை குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த போது அங்கு வந்த பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த கணேச பாண்டியன், முனியசாமி, குமார் உள்ளிட்டோர் கிஷோர்குமாரை வீட்டிற்கு வெளிவே வரவழைத்து தரக்குறைவாக பேசினர்.
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்தவர்கள், கிஷோர் குமாரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கணேசபாண்டியன், முனியசாமி, குமார் உட்பட ஆறு பேர் மீது கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
