/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இருவர் கைது
/
மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் இருவர் கைது
ADDED : ஜூன் 28, 2025 11:34 PM

பரமக்குடி: பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் தெருவில் மூதாட்டியிடம் நகை திருடிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி எம்.எஸ்.அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் மனைவி சுந்தராம்பாள் 70. இவர் ஜூன் 22ல் மதியம் வீட்டில் தனியாக இருந்த போது இரண்டு பேர் தண்ணீர் கேட்டு வந்துஉள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து சுந்தராம்பாளிடம் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர். டவுன் போலீசார் விசாரித்தனர்.
இச்சம்பவத்தில் பரமக்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சகுபர்சாதிக்44, புதுநகர் கண்ணன் 42, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது தங்கச் சங்கிலியை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதன் அடிப்படையில் மேலும் அவர்கள் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் ஈடுபட்டனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.