ADDED : மார் 11, 2024 05:38 AM
அ நிறம் | அளவு
தொண்டி: எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ.
கருப்பசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தீர்த்தாண்டதானம் கடற்கரையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த தொண்டி தெற்குதோப்பை சேர்ந்த வெங்கடேஷன் 21, விக்னேஸ்வரன் 29, ஆகியோரை சோதனை செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
