/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரத்தில் இரண்டு நாட்கள் மாற்றுத்திறனாளிகள் முகாம்
/
வாரத்தில் இரண்டு நாட்கள் மாற்றுத்திறனாளிகள் முகாம்
வாரத்தில் இரண்டு நாட்கள் மாற்றுத்திறனாளிகள் முகாம்
வாரத்தில் இரண்டு நாட்கள் மாற்றுத்திறனாளிகள் முகாம்
ADDED : அக் 16, 2025 11:54 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் திங்கள் தோறும் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் மாறுதல் செய்யப்பட்டு வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெற உள்ளது.
இதன்படி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட ஆரம்ப நிலை தலையீட்டு மையத்தில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும். எனவே மருத்துவச்சான்று, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இதுவரை பெறாத தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் வாரத்தில் புதன், வெள்ளிக்கிழமை களில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.