/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் டெங்கு இருவர் அனுமதி
/
ராமநாதபுரத்தில் டெங்கு இருவர் அனுமதி
ADDED : நவ 05, 2025 03:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் சமீப காலமாக காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலப்பதால் மக்களுக்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டெங்கு பாதிக்கப்பட்டு ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: இருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரமக்குடியை சேர்ந்த ஒருவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் வசிக்கும் பகுதியில் தினமும் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்து நோய் பரவல் குறித்து கண்காணிக்கின்றனர். மேலும், மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

