ADDED : செப் 14, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
தொண்டி:
எஸ்.பி.பட்டினம் அருகே பரப்புவயல் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் 57.இவர் கடந்த ஒரு ஆண்டாக புற்றுநோயால் அவதிபட்டார்.
இதனால் மனவேதனையில் இருந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அருள்தாஸ் இறந்தார்.எஸ்.பி.பட்டினம் அருகே ஓரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மனைவி சிநேகவல்லி 34. இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சிநேகவல்லி இறந்தார். இரு வழக்குகளையும் எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.
