தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஒரே கிராமத்தில் செயல்படும் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

 ஒரே கிராமத்தில் செயல்படும் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

 ஒரே கிராமத்தில் செயல்படும் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம்


ADDED : பிப் 24, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி அருகே ஏ.தரைக்குடியில் போதிய விளைச்சல் இல்லாத நிலையில் ஒரே கிராமத்தில் இரண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக மானாவாரியாக நெல் விவசாயம் செய்தனர்.

இந்நிலையில் கமுதி அருகே ஏ.தரைக்குடி கிராமத்தில் 500 ஏக்கருக்கு அதிகமாக நெல் விவசாயம் செய்தனர். நன்கு விளைச்சல் அடைந்து வந்த நிலையில் அறுவடை நேரத்தில் மழை இல்லாததால் போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகியது.

இதனால் ஏக்கருக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்தும் வீணாகியது. விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இன்சூரன்ஸ், நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.தரைக்குடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டு நெல் பெறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

ஏ.தரைக்குடி கிராமத்தில் பருவமழை பொய்த்ததால் நெல் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் பாதித்த ஒரே கிராமத்தில் இரண்டு இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அவசியம் அற்றது.

இதனால் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் நன்கு விளைச்சல் இருந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மனு கொடுத்தும் அங்கு அமைக்கப்படவில்லை. விளைச்சலே இல்லாத பகுதிகளில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us