/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண்ணுக்கு தொல்லை மீனவர்கள் இருவர் கைது
/
பெண்ணுக்கு தொல்லை மீனவர்கள் இருவர் கைது
ADDED : அக் 26, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிநோக்கம் : ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே ஆதஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 41 வயது பெண் நேற்றுமுன்தினம் காலை அங்குள்ள பாலாற்று பகுதியில் கூனி மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு ஆதம்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் பூமிராஜ் 29, சரவணன் 22 ,ஆகியோர் அப்பெண்ணிடம் 'எவ்வளவு கூனி மீன்பிடித்து உள்ளாய்' எனக்கேட்டு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை தந்துள்ளனர். பெண்கூச்சலிட்டதால் தப்பி ஓடினர். இருவரையும் வாலிநோக்கம் போலீசார் கைது செய்தனர்.