ADDED : மார் 25, 2026 06:12 AM

அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மார்ச் 12ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒரு படகில் இருந்த மினிட்டோ ராயப்பன் , சுமன்சன் ஆகியோரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற வாய்தா நாளான நேற்று இரு மீனவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி, அதனை ஒத்திவைத்து இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை கொழும்பு அருகில் உள்ள முகாமில் போலீசார் தங்க வைத்தனர். ஓரிரு நாட்களுக்கு பின் அவர்கள் விமான மூலம் சென்னை வர உள்ளனர்.
