ADDED : மே 09, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: பள்ளப்பச்சேரி கொதக்கோட்டை ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சாலையின் நடுவே இருதலை மணியன் பாம்பு இருந்தது. மூன்று கிலோ எடை கொண்ட 5 அடி நீளமுள்ள இரு பக்கமும் தலை கொண்ட இருதலை மணியன் பாம்பை அவ்வழியாகச் சென்ற பள்ளமோர்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விக்னேஷ் 24, பாதுகாப்பாக மீட்டார்.
இதுகுறித்து ராமநாதபுரம் தீயணைப்பு அலுவலகத்திற்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் இருதலை மணியன் பாம்பை பிடித்து ராமநாதபுரத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

