/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கார் கவிழ்ந்து இருவர் பலி
/
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கார் கவிழ்ந்து இருவர் பலி
ADDED : ஆக 25, 2025 01:18 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே களக்குடி விலக்கு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததில் அதில் பயணித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு உட்பட இருவர் பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் பூஞ்சோலை நகரைச் சேர்ந்த தேவராஜ் 58. இவரும் உறவினரான ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தட்சிணாமூர்த்தியும் 70, ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து நேற்று காலை காரில் ஊருக்கு புறப்பட்டனர். அதனை தட்சிணாமூர்த்தி ஓட்டினார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே களக்குடி விலக்கு திருச்சி -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 11:30 மணிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியாயினர். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.