/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிநோக்கத்தில் அமைக்கப்பட்ட இரண்டு பெரிய கிணறுகள் பராமரிப்பின்றி வீணாகுது கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : ஏப் 25, 2025 06:20 AM

வாலிநோக்கம்: வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரையோரத்தில் பொதுமக்களின்குடிநீர் பயன்பாட்டிற்காக ஓராண்டிற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு பெரிய கிணறுகள் முறையான பராமரிப்பின்றி பன்படுத்த வழியின்றி அப்பகுதி மக்கள் வேதனை அடைகின்றனர்.
வாலிநோக்கம் ஊராட்சியில் மன்னார் வளைகுடா கடற்கரைக்கு செல்லும் வழியில் திறந்தவெளி கிணறுகள் ஊராட்சி கணக்கு எண் 2ன் படி 2022 - மற்றும் 2023 உபரி நிதியில் ரூ.8 லட்சத்தில் பிளாட்பாரத்துடன் கூடிய கிணறும் அதன் அருகிலேயே ரூ.9 லட்சத்தில் மற்றொரு பெரிய கிணறும் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த கிணற்றில் பொதுமக்கள் தண்ணீர் சேகரித்து பயன்படுத்த வழியில்லாதவாறு பாசி படர்ந்தும் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை மிதக்கிறது.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
பொதுவாக வாலிநோக்கம் கடற்கரை ஓரப்பகுதியில் குறைந்த ஆழத்தில் கிணறு தோண்டினாலே நல்ல நீர் ஊற்று கிடைக்கும். ஆனால் அதனையும் மீறி 30 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டி உள்ளதால் குடிப்பதற்கு வழி இல்லாமல் உவர்நீராக மாறியுள்ளது.
இரண்டு கிணறுகளும் முறையான பராமரிப்பின்றி உள்ளதால் கிணற்றில் பாசி படர்ந்து குப்பை கொட்டும் இடமாக மாறுகிறது. எனவே பல லட்சம் செலவு செய்தும் அவற்றை பயன்படுத்துவதற்கு வழி இல்லாமல் போனதால் அரசு நிதி வீணடிப்பு செய்யப்படும்.
எனவே வாலிநோக்கம் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள இரண்டு கிணற்றையும் முறையாக துாய்மை செய்ய வேண்டும்.
கிணறு அமைக்க ஆர்வம் காட்டும் ஒப்பந்ததாரர்கள் பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற கிணறுகளை தோண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.