/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயிலில் 19 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது
/
ரயிலில் 19 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது
ரயிலில் 19 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது
ரயிலில் 19 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது
UPDATED : ஏப் 03, 2025 02:47 AM
ADDED : ஏப் 03, 2025 01:35 AM

ராமநாதபுரம்:-சென்னையில் இருந்து மண்டபம் வந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்து 19 கிலோ 700 கிராம் கஞ்சாவை
கடத்திய ஒடிசாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ரயில்களில்
பயணிப்போரின் பாதுகாப்பிற்காக திருச்சி ரயில்வே எஸ்.பி., ராஜன்
மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ரயிலில்
சோதனைகள், கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை
எழும்பூரில் இருந்து மண்டபம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு இல்லாத
பெட்டிகளில் திருச்சியில் இருந்து பயணித்தவர்களின் உடைமைகளை சோதனையிட்டனர்.
சத்திரக்குடி வந்தபோது சந்தேகத்திற்கிடமாக இருந்த இருவரிடம் இருந்து 19 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்கள்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே போக்கிரிப், கருந்தா நகர் பகுதியை
சேர்ந்த பிரியா பாரத் மொகாந்தி 40, லெக் ஷன்சாகர் பகுதியை சேர்ந்த
பிரதேஷ்மொகாந்தி 28, எனத்தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அவர்களை
ராமநாதபுரம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
எங்கிருந்து எங்கு கடத்தப்பட்டது, பின்னணியில் உள்ளவர்கள் யார் என
மேல்விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3
லட்சம் ஆகும்.

