/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு ராஜஸ்தான் வாலிபர்கள் இருவர் கைது
/
வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு ராஜஸ்தான் வாலிபர்கள் இருவர் கைது
வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு ராஜஸ்தான் வாலிபர்கள் இருவர் கைது
வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு ராஜஸ்தான் வாலிபர்கள் இருவர் கைது
ADDED : ஏப் 11, 2025 01:58 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் அரசு பஸ் கண்டக்டர் வீடு புகுந்து 7 பவுன் நகை திருடிய ராஜஸ்தான் வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பாம்பன் விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் வசந்தன். இவர் அரசு பஸ்சில் கண்டக்டராகவும்,மனைவி ராமலட்சுமி ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிகின்றனர். இவர்கள் பணிக்கு சென்ற நிலையில் இரு வாலிபர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து அங்கு மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். பின் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க செயின் மோதிரம், தோடுகளை திருடிச் சென்றனர்.
திருடர்கள் பீரோவை திறக்கும் சத்தம் கேட்டதும் சுதாரித்த பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், அவர்களை மடக்கி பிடித்து பாம்பன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் குனியாரா மாவட்டம் கஜுராவத கிராமத்தை சேர்ந்த ராகேஷ் பக்ரியா 25, சாந்த் பக்ரியா 27, என தெரிந்தது.
ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் பலுான் விற்கும் வியாபாரம் செய்து ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்துள்ளனர். நகையை மீட்ட போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

