தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தொழிலாளி கொலை வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை

தொழிலாளி கொலை வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை

தொழிலாளி கொலை வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை


UPDATED : நவ 18, 2026 11:08 PM

ADDED : நவ 18, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 11:08 PM ADDED : நவ 18, 2026 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி கொலை வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலாடி தாலுகா சாத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி 38. இவர் ஓட்டலில் சமையல் மாஸ்டராக இருந்தார். மனைவி கற்பகவல்லி, மகன் கவி மாதவன் உள்ளனர். 2017 மே 21ல் திருப்பதி ஓட்டல் பணி முடிந்து தனது மகனுடன் மலட்டாறு முக்கு வழியாக நடந்து சென்றார்.

அப்போது சாத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த மோகன் 55, பசும்பொன் லிங்கம் 56, திருப்பதியை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டனர். தர மறுத்ததால் ஆத்திரமடைந்தவர்கள் அருகில் இருந்த கட்டையால் திருப்பதியை தாக்கினர். இதில் திருப்பதி பலியானார். சாயல்குடி போலீசார் மோகன், பசும்பொன் லிங்கத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று நீதிபதி பாலமுருகன் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us