/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் இரு வேன்கள் மோதல்
/
தனுஷ்கோடியில் இரு வேன்கள் மோதல்
ADDED : நவ 22, 2025 12:30 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலையில் இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 20 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அரிச்சல்முனையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த மினி வேனை டிரைவர் தட்சிணாமூர்த்தி 35, ஓட்டினார். ராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை சென்ற வேனை சதீஸ் 30, ஓட்டினார்.
அரிச்சல் முனையில் இரு வேன்களும் மோதியதில் பலத்த சேதமடைந்தன. வேன்களில் இருந்த 20 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டிரைவர் தட்சிணாமூர்த்தி பலத்த காயமடைந்தார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

