ADDED : மே 24, 2026 02:51 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கார் மோதியதில் டூவீலரில் சென்ற இருவர் பலியாயினர்.
சிவகங்கை மாவட்டம் துானுகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் 70. இவரும், உறவினரான சமையல் மாஸ்டர் செலுகை பகுதியைச் சேர்ந்த கருப்பையா 60, என்பவரும் சமையல் வேலைக்காக டூவீலரில் திருவாடானையிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் நோக்கி நேற்று மாலை 5:00 மணிக்கு சென்றனர்.
திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஏ.ஆர்.மங்கலம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது ,எதிரே திருச்சி நோக்கி சென்ற கார் டூவீலரில் மோதியதில் குமரேசன், கருப்பையா தலையில் பலத்த காயமடைந்து பலியாயினர். கார் டிரைவர் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் 43, ஆர்.எஸ்.மங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
