/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர்--பஸ் மோதல் டீ மாஸ்டர் பலி
/
டூவீலர்--பஸ் மோதல் டீ மாஸ்டர் பலி
ADDED : ஜன 20, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சிப்புளி; கடலாடியை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முத்துக்குமார் 19. இவர் உச்சிப்புளி பகுதியில் வசித்து வந்தார். இங்கு டீ மாஸ்டராக வேலை செய்தார். நேற்று காலை தனது டூவீலரில் உச்சிப்புளியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற போது எதிரில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்தில் பலியானார். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.