தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்கும் டூவீலர்கள்பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் சிக்கல்

பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்கும் டூவீலர்கள்பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் சிக்கல்

பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்கும் டூவீலர்கள்பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் சிக்கல்


UPDATED : செப் 08, 2026 07:05 PM

ADDED : செப் 08, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 07:05 PM ADDED : செப் 08, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியில் பிற வாகனங்கள், டூவீலர்களை கண்டபடி நிறுத்துவதால் பஸ்களை நிறுத்தவும், வெளியே புறப்படும் போதும் தினந்தோறும் இடையூறு ஏற்படுகிறது.

ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் டூவீலர் பார்க்கிங் கட்டணம் வசூல் செப்.,1 முதல் துவங்கியுள்ளது. ஒரு டூவீலருக்கு ரூ.20 வசூலிக்கின்றனர். பிற இடங்களில் டூவீலர்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். அதையும் மீறி பஸ் ஸ்டாண்டின் உட்பகுதிகளில் டூவீலர்களை கண்டபடி நிறுத்துகின்றனர். மேலும் அத்துமீறி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் ஆட்டோக்கள், கார்கள் வந்து செல்கின்றன. இதனால் பஸ்கள் நிறுத்தும் போதும், புறப்படும் போதும் தாமதம், இடையூறு ஏற்படுகிறது.

எனவே பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் டூவீலர்களை அகற்ற வேண்டும். அத்துமீறி உள்ளே வரும் பிற வாகனங்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி,போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us