/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதி வாலிபர் பலி
/
சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதி வாலிபர் பலி
ADDED : ஜன 08, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே புறக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஸ்குமார் 30.
இவர் நேற்று தனது ஊரிலிருந்து தேவிப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு டூ வீலரில் புறப்பட்டார்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி அருகே முன்சென்ற சரக்கு வாகனம் ரோட்டோரத்தில் நிறுத்தும் போது அதன்மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்தில் பிரதீஸ் குமார் பலியானார்.
அலங்காநல்லுார் அருகே சின்னப்பட்டியை சேர்ந்த டிரைவர் திரவியம் 54, மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.