ADDED : ஜன 15, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் இருவர் பலியாயினர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கேசனிகலவம் கிராமத்தை சேர்ந்தவர் வீரசேகர் 45. தச்சு வேலை செய்து வந்தார்.
ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மனைவி சுப்புலட்சுமியுடன் 40, டூவீலரில் நேற்று மாலை 4:45 மணிக்கு வந்தார்.
ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்த போது ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்த சிராஜ்தீன் மகன் சேரன் 26, ஓட்டி வந்த டூவீலர், இவரது டூவீலருடன் மோதியது.
இதில் வீரசேகரும், சேரனும் பலியாயினர். சுப்புலட்சுமி காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.