/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரு சக்கர வாகனம் திருடியவருக்கு 8 மாதம் கடுங்காவல் தண்டனை
/
இரு சக்கர வாகனம் திருடியவருக்கு 8 மாதம் கடுங்காவல் தண்டனை
இரு சக்கர வாகனம் திருடியவருக்கு 8 மாதம் கடுங்காவல் தண்டனை
இரு சக்கர வாகனம் திருடியவருக்கு 8 மாதம் கடுங்காவல் தண்டனை
ADDED : பிப் 21, 2024 11:29 PM
ராமநாதபுரம், - -ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார்வலசை பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவருக்கு 8 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் அருகே அழகன்குளம், நாடார்வலசை பகுதியில் இஸ்மாயில் என்பவரது பெட்டிக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த வெங்கடேஷ் 36, என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர். தேவிப்பட்டினம் போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார்.
இருசக்கர வாகனத்தை திருடிய தேர்போகி சுப்பிரமணி மகன் அரவிந்த் 24, தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் மன்றம் 2ல் நடந்தது. மாஜிஸ்திரேட் பிரபாகரன் அரவிந்துக்கு 8 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.---------