/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள டூவீலர்கள் ஆவணங்களை காட்டி எடுத்து செல்லலாம்

ADDED : ஜூன் 30, 2025 04:16 AM
திருவாடானை : போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு முடிந்து எடுத்து செல்லாமல் உள்ள டூவீலர்களை உரிய ஆவணங்களை காண்பித்து எடுத்து செல்லலாம் என திருவாடானை டி.எஸ்.பி. சீனிவாசன் கூறினார்.
அவர் கூறியதாவது- திருவாடானை சப்-டிவிசனில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் ஆகிய போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளன. விபத்து, மது அருந்தி டூவீலர் ஓட்டியது மற்றும் பல்வேறு குற்றசெயல்களில் சம்பந்தபட்ட டூவீலர்கள் கைபற்றபட்டு, போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கபட்டது. இதில் வழக்குகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் வாகன உரிமையாளர்கள் வாகனங்களை எடுத்துச் செல்லாமல் உள்ளனர். எனவே சம்பந்தபட்ட வாகன உரிமையாளர்கள் ஆதார் அட்டை, வாகன உரிமையை உறுதிபடுத்தும் ஆவணங்களை காண்பித்து எடுத்து செல்லலாம்.
கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள வாகனங்கள் ஒப்படைக்கபடமாட்டது. குறிப்பாக டூவீலர் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி எடுத்து செல்லலாம். திருவாடானை அருகே மங்களக்குடியில் புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனையில் உள்ளது. உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.