/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலுாட்டும் அறை அருகே டூவீலர்கள் ஆக்கிரமிப்பு; : தாய்மார்கள் பாதிப்பு

ADDED : நவ 25, 2024 06:58 AM

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை முன்பு டூவீலர் நிறுத்துமிடமாக மாறி வருவதால் தாய்மார்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துாரில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமேஸ்வரம், திருச்செந்துார் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு தினந்தோறும் பஸ் இயக்கப்படுகிறது.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருந்து பஸ்ஸில் செல்கின்றனர். கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு பாலுாட்டும் அறை திறக்கப்பட்டு தாய்மார்கள் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில் பாலுாட்டும் அறை முன்பு டூவீலர், கார்கள் நிறுத்துவதால் செல்வதற்கே பாலுாட்டும் முகம் சுழிக்கின்றனர்.
இதனால் டூவீலர் நிறுத்துமிடமாக மாறி வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும், முறையாக பராமரிக்கவும் வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.