/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்: வாலிபர் பலி
/
டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்: வாலிபர் பலி
ADDED : ஜன 30, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை,- -கீழக்கரை அருகே வைகை கிராமம் அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் ராமு மகன் பாண்டி 29. இவர் தனது டூவீலரில் வைகையில் இருந்து கீழக்கரைக்கு செல்லும்போது மதுரையில் இருந்து கீழக்கரை செல்லும் சாலையில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த டூவிலர் மீது நேருக்குநேர் மோதி விபத்து நடந்தது.
சம்பவ இடத்திலேயே பாண்டி பலியானார். மற்றொறு டூவீலரில் வந்த நத்தம் மாலிக் மகன் முகமது பர்வீஸ் 20 கால் முறிவு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.