/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரண்டாண்டுகளுக்கு பின் பாம்பன் பழைய ரயில் துாக்கு பாலம் புதுப்பிக்கும் பணி

ADDED : பிப் 19, 2025 01:35 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பழைய ரயில் துாக்கு பாலத்தை இரண்டாண்டுகளுக்கு பிறகு சீரமைத்து புதுப்பிக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பாம்பன் கடலில் 1914ல் அமைக்கப்பட்ட ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் 2022 டிச.23ல் இரும்பு பிளேட் சேதமடைந்ததும் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அன்று முதல் ரயில் துாக்கு பாலத்தை பராமரிக்காமல் தெற்கு ரயில்வே கிடப்பில் போட்டது.
இந்நிலையில் புதிய ரயில்வே துாக்கு பாலம் கட்டப்பட்டு மார்ச்சில் திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
அப்போது பழைய, புதிய துாக்கு பாலம் திறந்து மூடுவதை பிரதமர், அமைச்சர்கள் பார்வையிட உள்ளனர்.
இதனால் 2 ஆண்டுகளுக்குப் பின் நேற்று பழைய துாக்கு பாலத்தில் துருப்பிடித்த இரும்புகளை அகற்றி பராமரிப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன்பின் துாக்கு பாலத்தில் உப்புக்காற்றில் துருப்பிடிக்காத ரசாயனம் கலந்த அலுமினிய பெயின்ட் பூசப்பட்டு புதுப்பிக்கப்படும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.