/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உலகநாயகி அம்மன் கோயில் முளைப்பாரி விழா
/
உலகநாயகி அம்மன் கோயில் முளைப்பாரி விழா
ADDED : செப் 07, 2025 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் உலகநாயகி அம்மன் கோயில் ஆவணி பொங்கல் முளைப்பாரி விழா முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் பெண்கள் கும்மியடித்தும் வந்தனர். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை அபிஷேகம் நடந்தது.
இதனை முன்னிட்டு கோயில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
உலகநாயகி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து தண்ணீரில் கரைத்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது.