/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியல: உறவினர் கவலை
/
மீனவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியல: உறவினர் கவலை
மீனவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியல: உறவினர் கவலை
மீனவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியல: உறவினர் கவலை
ADDED : ஜன 25, 2025 06:49 AM
திருவாடானை :  தொண்டி அருகே இறந்த மீனவர் உடல் திருவாடானை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் உறவினர்கள் கவலையடைந்தனர்.
திருவாடானையில் அரசு மருத்துவமனை உள்ளது. 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கபட்டுள்ளனர். ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார்.
இந்நிலையில் இங்கு பணியாற்றிய தற்காலிக துாய்மைப் பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.  இதனால் விபத்து, கொலை, தற்கொலை செய்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரும் போது துாய்மை பணியாளர் இல்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. இது குறித்து திருவாடானை  நேதாஜி மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தினர் கூறியதாவது:
தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்தவர் பசுமலை. இரு நாட்களுக்கு முன்பு துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். அவரது உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது  துாய்மைப் பணியாளர் இல்லாததால் ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தனர்.
இதனால் 60 கி.மீ., ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்லப்டடது. அவரின் உறவினர்கள் ஆம்புலன்சுடன் பின் தொடர்ந்து சென்றதால் மிகுந்த சிரமப்பட்டனர்.
தாலுகா தலைமையிடமாக திகழும் திருவாடானை அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர் மற்றும் துாய்மை பணியாளர்கள் நியமிக்க கோரி விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

