/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெறலாம்
/
வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெறலாம்
ADDED : ஜன 29, 2025 07:44 AM
ராமநாதபுரம், ஜன.29-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித பணி வாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி, 10ம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித் தொகையாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக காத்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 45 வயதிற்குள்ளும், மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதே போல மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உதவித் தொகை கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு ரூ.600 முதல் ரூ.1000 வரை வழங்கப்படும். வேறு எந்த அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.
தகுதியுள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அனைத்து சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

