/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற கழிப்பறை: நோயாளிகள் அவதி
/
முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற கழிப்பறை: நோயாளிகள் அவதி
முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற கழிப்பறை: நோயாளிகள் அவதி
முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற கழிப்பறை: நோயாளிகள் அவதி
ADDED : ஜன 15, 2024 04:09 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த முடியாத அளவிற்கு சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் நோயாளிகள் முகம் சுளிக்கின்றனர்.
கூடுதல் நோய் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர்.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், சித்த மருத்துவம், மகப்பேறு பிரிவு, எக்ஸ்ரே பிரிவு என தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகிறது.
உள்நோயாளிகள் பிரிவில் சிறுவர், ஆண்கள்,பெண்கள் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு 60 படுக்கை வசதிகள் உள்ளது.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள காக்கூர், ஏனாதி, இளஞ்செம்பூர், வெண்ணீர்வாய்க்கால், செல்வநாயகபுரம், கீரனுார், ஆத்திகுளம், புளியங்குடி, விளங்குளத்துார், கீழத்துாவல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர்.
பருவமழைக் காலம் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நோயாளிகள் பிரிவில் உள்ள கழிப்பறை சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசுகிறது.
கை கழுவும் தொட்டியில் தண்ணீர் செல்லாமல் தேங்கியுள்ளது. இதனால் கழிப்பறைக்கு செல்வதற்கு நோயாளிகள் முகம் சுளிக்கின்றனர்.
நோய்க்கு சிகிச்சை பெற வந்து இந்த கழிப்பறையை பயன்படுத்தினால் மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே அரசு மருத்துவமனையில் கழிப்பறையை முறையாக பராமரித்து சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.