/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய பாலத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு
/
பாம்பன் புதிய பாலத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு
ADDED : டிச 24, 2024 07:07 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மத்திய இணை அமைச்சர் பூபதிராஜூ சீனிவாச சர்மா ஆய்வு செய்தார்.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி 100 சதவீதம் முடிந்த நிலையில் பாலத்தை நவ.,ல் 14 ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி சில குறைகளை சுட்டிக்காட்டினார். இதனால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை 5:20 மணிக்கு மத்திய இரும்பு, கனரக தொழிற்சாலைத் துறை இணை அமைச்சர் பூபதிராஜூ சீனிவாச சர்மா பாம்பன் வந்தார். டிராலியில் புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தை ஆய்வு செய்து ரயில்வே பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை மத்திய அமைச்சர் ஆய்வு செய்ததால் ஜன., 30க்குள் திறப்பு விழா நடக்க வாய்ப்பு உள்ளது என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.