/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீபாவளிக்கு தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
/
தீபாவளிக்கு தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
தீபாவளிக்கு தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
தீபாவளிக்கு தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : அக் 29, 2024 04:24 AM
ராமநாதபுரம்,: தீபாவளிக்கு தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தீபாவளிக்கு அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் கூறியிருப்பதாவது:
பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதால் அரசு போக்குவரத்துக்கழத்திற்கு இழப்பு ஏற்படும். திருவிழா நேரங்களில் அரசு பஸ்கள் இருந்தாலும் தனியார் பஸ்களில் தான் பயணிகள் செல்கின்றனர்.
தமிழகத்தில் 25 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில் அரசு போக்குவரத்துக்கழகம் 18 ஆயிரத்து 500 பஸ்களை மட்டுமே இயக்குகிறது. கொரோனா பாதிப்பிற்கு பின் படிப்படியாக அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் குறைக்கப்பட்டு தற்போது 6500 பஸ்கள்நிறுத்தப்பட்டு விட்டன. அரசு போக்குவரத்து கழகத்தில் 25 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த காலி பணியிடங்களை நிரப்பி கூடுதல் பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கினால் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்க வேண்டிய அவசியமில்லாத நிலை ஏற்படும். அரசு போக்குவரத்துக்கழகத்தை தனியார் மயமாக்கும் செயலில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.