பரமக்குடியில் பராமரிக்கப்படாத மைதானங்கள்: வீரர்கள் பாதிப்பு
பரமக்குடியில் பராமரிக்கப்படாத மைதானங்கள்: வீரர்கள் பாதிப்பு
ADDED : ஆக 23, 2026 12:04 AM

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள மினி ஸ்டேடியம் உட்பட பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் பராமரிக்கப்படாததால் வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பரமக்குடி நகராட்சி சந்தை திடலில் ரூ.30 லட்சத்தில் 2007ம் ஆண்டு மினி ஸ்டேடியம் திறக்கப்பட்டது.
400 மீ., ஓடுதளம் உட்பட தடகள போட்டிகள் நடத்த வசதிகள் இருந்த நிலையில் 15 ஆண்டு களுக்கு மேலாக வீணாகி வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும் நிலை உள்ளது. இங்கு 200 மீ., ஓடுதளம் அமைக்கும் வகையில் வசதி உள்ளது.
இதனால் 1200, 3000 மீ., ஓடும் போது சிக்கல் ஏற்படுகிறது. மேலும் நீளம் தாண்டுதல் பகுதி சிமென்ட் பூச்சால் கட்டப்பட்ட நிலையில் ஒரு அடி பள்ளத்தில் குதிக்கும் சூழல் உள்ளது.
இதே போல் உயரம் தாண்டுதலுக்கு பயன்படுத்தும் மேட் முற்றிலும் கிழிந்து மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தொடர் தடை ஓட்டம், கம்பு ஊன்றி தாண்டுதல் என தடகளத்திற்கு தேவையான பொருட்கள் இல்லை.
வீரர்களுக்கு உடைமாற்றும் இடம் உட்பட கழிப்பறை வசதிகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர். நன்கு பயிற்சி எடுத்த வீரர்களும் மைதானம் முறையாக இல்லாததால் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்க முடியாமல் இருக்கின்றனர்.
எனவே பரமக்குடியில் உள்ள மினி விளையாட்டு மைதானத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதுடன், பள்ளிகளில் உள்ள மைதானங்களையும் பரா மரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
