/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாக்டர்கள் பற்றாக்குறை நா.த.க., ஆர்ப்பாட்டம்
/
டாக்டர்கள் பற்றாக்குறை நா.த.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 01, 2025 02:38 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கின்றனர். இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் தலைமை வகித்தார்.
இதில், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் 18 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது 4 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால் வெளி, உள்நோயாளிகள் பூரண சிகிச்சை பெரிய பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனை கண்டித்தும் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தினர். நிர்வாகிகள் மாரிமுத்து, செந்தில் வேல், பிரேம், நம்புராஜன், சதீஷ் பங்கேற்றனர்.