/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழை நின்று பல நாளாகியும் குடியிருப்பில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதாரக்கேடு
/
மழை நின்று பல நாளாகியும் குடியிருப்பில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதாரக்கேடு
மழை நின்று பல நாளாகியும் குடியிருப்பில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதாரக்கேடு
மழை நின்று பல நாளாகியும் குடியிருப்பில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதாரக்கேடு
ADDED : டிச 08, 2024 06:25 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சூரன்கோட்டை ஊராட்சி முதுனாள் பகுதியில் மழை நின்று பல நாட்களாகியும் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் புறநகர்பகுதியில் உள்ள சூரன்கோட்டை ஊராட்சி முதுனாள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளில் மக்கள்வசிக்க முடியாத நிலை உள்ளது.
இரவு நேரங்களில் வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் வருகின்றன. இங்கு வழங்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறமாக கழிவுகள் கலந்துஉள்ளதால் பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர். மின்சார கம்பங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது.
ஊராட்சி நிர்வாகத்திடம்பல முறை புகார் அளித்தும்நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எஸ்.சத்தியராஜ்: சூரன்கோட்டை ஊராட்சி முதுனாள் கிராமத்தில் மழை நீர் தேங்கி பல நாட்களாகியும் வடிகால் வசதியில்லாததால் வடியவில்லை. குடியிருப்பு பகுதியில் தேங்கியிருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது என்றார்.
எஸ்.மைதிலி: முதுனாள் பகுதியில் குடிநீர் மஞ்சள்நிறத்தில் கழிவு நீர் கலந்து வழங்கப்படுகிறது. இதனை குடிப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். வேறு வழியின்றி குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. மின் கம்பங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் மக்கள் தெருக்களில் நடக்க அச்சமாக உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.