தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/போதிய விலை கிடைக்காமல் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிப்பு

போதிய விலை கிடைக்காமல் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிப்பு

போதிய விலை கிடைக்காமல் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிப்பு


UPDATED : நவ 19, 2026 05:28 PM

ADDED : நவ 19, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 05:28 PM ADDED : நவ 19, 2026 05:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் உப்பளங்கள் செயல்படவில்லை. சீசன் இல்லாத காலத்தில் அதிக விலை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஏற்கனவே உற்பத்தி செய்த உப்புக்கு உரிய விலை கிடைக்காமல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கடற்கரை ஓட்டிய கிராமங்களில் ஏராளமான உப்பளங்கள் செயல்படுகின்றன. டிசம்பரில் தொடங்கும் உப்பு உற்பத்தி அடுத்தாண்டு ஜூன் வரை நடக்கும். மாவட்டத்தில் 2 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது புயல், மழை, குளிர்ந்த காற்று ஆகிய காரணங்களால் உப்பளங்களில் உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.

இதன் எதிரொலியாக மாவட்டத்தில் ஏற்கனவே உற்பத்தியான உப்பு ரூ.2500 முதல் ரூ.2800 வரை மட்டுமே விலை போகிறது. சீசன் நேரத்தில் ஒரு டன் ரூ.3000த்திற்கும் மேல் விற்கப்பட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ---------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us