/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பயன்பாடின்றி உள்ள மீன்துறை லாரி: ரூ.10 லட்சம் வீண்
/
ராமேஸ்வரத்தில் பயன்பாடின்றி உள்ள மீன்துறை லாரி: ரூ.10 லட்சம் வீண்
ராமேஸ்வரத்தில் பயன்பாடின்றி உள்ள மீன்துறை லாரி: ரூ.10 லட்சம் வீண்
ராமேஸ்வரத்தில் பயன்பாடின்றி உள்ள மீன்துறை லாரி: ரூ.10 லட்சம் வீண்
ADDED : ஜன 25, 2025 07:17 AM
ராமேஸ்வரம் :   ராமேஸ்வரத்தில் மீன்துறைக்கு சொந்தமான லாரி பயன்பாடின்றி முடங்கியதால் மக்கள் வரிப்பணம் ரூ.10 லட்சம் வீணாகியது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் வசதிக்காக வலையில் சிக்கும் மீன்களை துரிதமாக மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல மீன்துறை சார்பில் ரூ.10 லட்சத்திற்கு லாரி வாங்கினர். இதனை துவக்கத்தில் மீனவர்கள் ஆர்வமுடன் பயன்படுத்திய நிலையில் இதற்குரிய குறைந்த கட்டணத்தை மீன்துறைக்கு செலுத்தினர்.
இந்த லாரியை முறையாக பராமரிக்காததால் இன்ஜின் பழுதாகி முடங்கியது. லாரியை ராமேஸ்வரம் மீன்துறை அலுவலக கார் செட்டில் ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி உள்ளனர். இதனால் லாரியின் பிற பாகங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது. இதனை புதுப்பித்து இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வரிப்பணம் ரூ.10 லட்சம் வீணாகிப் போனது.