/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உ.பி., இளைஞர் 7000 கி.மீ., நடைபயணம்
/
உ.பி., இளைஞர் 7000 கி.மீ., நடைபயணம்
ADDED : மே 16, 2025 11:52 PM

ராமேஸ்வரம்:உ.பி., இளைஞர் ஜோதிர்லிங்க தலங்களில் தரிசிக்க 7000 கி.மீ., ஆன்மிக நடைபயணமாக செல்கிறார். இவர் நேற்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
உ.பி., அயோத்தியை சேர்ந்த ரோகித் காஸ்யாப் 40, ராம பக்தரான இவர் அயோத்தியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். ஜோதிர்லிங்க தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய மார்ச் 27ல் அயோத்தியில் இருந்து ஆன்மிக நடை பயணத்தை துவக்கினார். ம.பி., மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழகம் வந்து நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார்.
இங்கிருந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உ.பி., மாநிலங்கள் வழியாக பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். இவர் தினமும் 50 முதல் 60 கி. மீ., நடை பயணம் செய்கிறார். பயணம் ஜூலை இறுதியில் நிறைவு பெறும் எனவும், 7000 கி.மீ., செல்வதாகவும் ரோகித் தெரிவித்தார்.